Disqus Shortname

உத்தரமேரூரில் பூட்டி கிடக்கும் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம்

உத்தரமேரூர் ஆக,04
உத்தரமேரூர் பேரூராட்சியில் 12வது வார்டுக்குட்பட்ட வாழைத்தோட்ட பின்
தெருவில் 2011-2012 ஆம் ஆண்டிற்க்கான பொது நிதியில் இருந்து ரூ.2.25
இலட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடம் செப்டம்பர்
2012-ல் திறக்கப்பட்டது. பெயரளவில் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் தற்போது
வரை பூட்டியே உள்ளது. இந்த கழிப்பிடம் உள்ள இடத்தில் தள்ளுவண்டி
நிறுத்தமாகவும், தேவையற்ற பொருட்கள் வைக்கும் இடமாகவும் அருகில்
உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் இல்லாத இடத்தில் கழிப்பிடம் கட்டி அரசு பணம் வீண் செய்வதாக பொது மக்கள் குற்றம்
சாற்றுகின்றனர். இந்த கழிப்பிடம் பொது கழிப்பிடமாக மாற்றி பொது மக்கள்
பயன்பாட்டிற்கு வைத்திருந்தால் அருகில் உள்ள பொது மக்கள் இக்கழிப்பிடத்தை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் இக்கட்டிடம் பூட்டியே உள்ளதால் அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே பூட்டிய இக்கட்டிடத்தை திறந்து பொது கழிப்பிடமாக மாற்றி தருமாறு அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments