Disqus Shortname

உத்தரமேரூர் சுகாதார தூதுவர்களுக்கான பயிற்சி முகாம்

உத்தரமேரூர் ஆக.21
உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமையன்று பாரத சுகாதார இயக்கத்திட்டத்தின் கீழ் சுகாதார தூதுவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் துவங்கியது. வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா தலைமை தாங்கினார். உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சி.என்.பரிமளா முன்னிலை வகித்தார் தமிழக முதல்வர் கனவு திட்டம் 2023 இலக்கிணை அடைய தமிழகத்தை சுகாதார மாநிலமாக மாற்ற 2015-க்குள் திறந்த வெளியில் மலம், சிறுநீர்கழிக்கும் பழக்கத்தை மாற்றி சுகாதார கழிவறையை பயன்படுத்தும் பழக்க வழக்கங்களை மக்களிடையே கடைப்பிடிக்க தீவிரமாக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக நிர்மல் பாரத் அபியான் திட்டத்தினை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தீவிரமாக செயல்படுத்தும் நோக்கிலும் கிராம ஊராட்சியில் சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுகாதார தூதுவர்களை நியமித்து அவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் திறந்த வெளி மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், சுகாதார சீர்கேடுகள் மற்றும் சுகாதாரக் கழிப்பறை கட்டுவது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும் சுகாதாரம் குறித்து படக்காட்சிகள் மூலம் கொக்கிபுழு, நாடாப்புழு, உறிஞ்சும்குழி, குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கெம்பு மற்றும் வட்டார  ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நடத்தினார்கள்.

No comments