Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு இடைத்தேர்தல்:அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட் 30, 

கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பாளர்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் காலியாக உள்ளன.இதேபோல் 8 நகர மன்ற தலைவர் பதவிகளுக்கும், 12 மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், 53 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும், 101 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 82 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேயர் வேட்பாளர்கள்
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18-9-2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகர மன்றத்தலைவர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கீழ்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
கோயம்புத்தூர் மாநகராட்சி - கணபதி ப.ராஜ்குமார் (கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், மாநகராட்சி வடக்கு மண்டலக் குழு தலைவர்). திருநெல்வேலி மாநகராட்சி - இ.புவனேஸ்வரி (திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்). தூத்துக்குடி மாநகராட்சி - ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி (தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்).

மாநகராட்சி உறுப்பினர் - நகர மன்ற தலைவர்
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-


சென்னை மாநகராட்சி 35-வது வார்டு (வடசென்னை வடக்கு மாவட்டம்) - ஏ.டேவிட் ஞானசேகரன் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்). சென்னை மாநகராட்சி 166-வது வார்டு (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்) - எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன் (ஆலந்தூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்).நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
அரக்கோணம் நகராட்சி (வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம்) - எஸ்.கண்ணதாசன் (நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர், 28-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர்). கடலூர் நகராட்சி (கடலூர் கிழக்கு மாவட்டம்) - ஆர்.குமரன் (கடலூர் நகர செயலாளர்). விருத்தாசலம் நகராட்சி (கடலூர் கிழக்கு மாவட்டம்) - பி.அருளழகன் (விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக் கழக செயலாளர்). குன்னூர் நகராட்சி (நீலகிரி மாவட்டம்) - டி.சரவணகுமார் (மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்). புதுக்கோட்டை நகராட்சி (புதுக்கோட்டை மாவட்டம்) - ஆர்.ராஜசேகரன் (மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்). கொடைக்கானல் நகராட்சி (திண்டுக்கல் மாவட்டம்) - எம்.ஸ்ரீதர். ராமநாதபுரம் நகராட்சி (ராமநாதபுரம் மாவட்டம்) - எஸ்.சந்தானலெட்சுமி. சங்கரன்கோவில் நகராட்சி (திருநெல்வேலி மாநகர் மாவட்டம்) - வி.எம்.ராஜலெட்சுமி (18-வது வார்டு இளம் பெண்கள் பாசறை செயலாளர்).
நகர மன்ற வார்டு உறுப்பினர்
நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

பல்லாவரம் நகர மன்ற 2-வது வார்டு (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்) - ஏ.சி. கணேசன் (2-வது வார்டு கழக செயலாளர்). தாம்பரம் நகர மன்ற 7-வது வார்டு (காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்) - எம்.கே.நாகூர்கனி (மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர்). தாம்பரம் நகர மன்ற 33-வது வார்டு - யு.கோமளா. மறைமலைநகர் நகர மன்ற 11-வது வார்டு (காஞ்சீபுரம் மத்திய மாவட்டம்) - பி.கலையரசி (11-வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி). செங்கல்பட்டு நகர மன்ற 1-வது வார்டு (காஞ்சீபுரம் மத்திய மாவட்டம்) - வி.ஜீவரத்தினம். செங்கல்பட்டு நகர மன்ற 6-வது வார்டு - வி.கன்னியப்பன் (6-வது வார்டு கழக செயலாளர்). மதுராந்தகம் நகர மன்ற 15-வது வார்டு (காஞ்சீபுரம் மத்திய மாவட்டம்) - கே.வடிவேல். ஆவடி நகர மன்ற 33-வது வார்டு (திருவள்ளூர் தெற்கு மாவட்டம்) - ஏ.உமா மகேஸ்வரி.

பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு (காஞ்சீபுரம் மத்திய மாவட்டம்) - சு.மெய்யப்பன். 
உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு (காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம்) - சி.வேளாங்கண்ணன். 
வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற 15-வது வார்டு (காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம்) - எஸ்.கணபதி (15-வது வார்டு கழக செயலாளர்).

ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு 15-வது வார்டு - கே.தட்சணாமூர்த்தி (ஒன்றிய விவசாயப் பிரிவு இணைச் செயலாளர், அனந்தமங்கலம் ஊராட்சிக் கழக செயலாளர்). காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 16-வது வார்டு - சி.வி.சதீஷ்குமார் (ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்). திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழு 2-வது வார்டு - எஸ்.அலமேலு. ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழு 10-வது வார்டு - பி.செல்வமணி. பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு - எம்.சித்ரா.


இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments