Disqus Shortname

உத்தரமேரூரில் 62 வது விஜயகாந்த் பிறந்த நாள் விழா

உத்தரமேரூர் ஆக, 25
உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட 73 பஞ்சாயத்துகளிலும் கேப்டன் விஜயகாந்த்
பிறந்தநாள் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தே.மு.தி.க
தொண்டர்கள்  பட்டாசு வெடித்தும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும்
ஏழை எளிய  மக்களுக்கு அன்னதானம் அளித்தும் சிறப்பாக கொண்டாடினர்.
சடச்சிவாக்கம் தொடக்கப்பள்ளியிலும் மற்றும் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளிகளிலும் மாணவ-மாணவியர்களுக்கும் நோட்டு புத்தகம், பேனா,
பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. உத்தரமேரூர் பஜார் வீதியில்
62 கிலோ கேக்கு வெட்டி ஏழை எளியோருக்கு வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர் அழிசூர் வி,கன்னியப்பன் தலைமை தாங்கினார், ஒன்றிய அவைத்
தலைவர் வீரமணி, ஒன்றிய துணை செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர்.
உத்தரமேரூர் பேரூர் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். காஞ்சி தெற்கு
மாவட்ட செயலாளர் இரமேஷ் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்
பழனி ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன் மற்றும் மாவட்ட ஒன்றிய
கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments