Disqus Shortname

இலவச சீருடைகள் மற்றும் நோட்டுபுத்தகம் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஆக,09
உத்தரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டியில் உள்ள ஸ்ரீகீர்த்திமதி அன்னையின் 56-ம் ஆண்டு அவதார திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. வருடாவருடம் அவதார திருவிழாவன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக 56-ம் ஆண்டு அவதார திருவிழவையொட்டி நேற்று கருவேப்பம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 174 மாணவ-மாணவியர்களுக்கு இனிப்புகளுடன், சீருடைகளும், நோட்டுபுத்தகங்களும் ஓம் சக்திபீட மங்கையின் மகிமை அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ கீர்த்திமதி அன்னை கரங்களால் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் மதியம் பள்ளி மாணவ-மாணவியர் உட்பட 500 க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதவன்
மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments