Disqus Shortname

தளவராம்பூண்டியில் அங்கன்வாடிமையம் தேவை கிராம மக்கள் கோரிக்கை

உத்தரமேரூர்ஆக,09
உத்தரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி கிராமத்தில் சுமார் 400-க்கு மேற்பட்ட
மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார்
15 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. ஆனால் இங்கு குழந்தைகள் பயில
அங்கன்வாடிமையம் ஏதும் இல்லை. கடந்த 2009-ல் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தளவராம்பூண்டி கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் மழலையர் பள்ளி ஒன்று துவக்கி செயல்பட்டுத்தி வந்தது. அங்கு கிராமத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 20 திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். அதுவும் கடந்த 7  மாதங்களாக போதிய நிதி கிடைக்காததால் மழலையர் பள்ளியை மூடிவிட்டனர்.  இங்குள்ள குழந்தைகள் 5கிமி தொலைவில் உள்ள பட்டாங்குளத்தில் உள்ள அங்கன்வாடிமையத்திற்கு சென்று பயில வேண்டியுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தையை வெகுதூரம் அனுப்ப தயங்குகின்றனர். மேலும் அங்கன்வாடிமையத்தில் வழங்கப்படும் சத்தான ஊட்ட சத்து மிக்க உணவுகள்  இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. எனவே குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தளவராம்பூண்டி கிராமத்தில் அங்கன்வாடிமையம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

No comments