Disqus Shortname

ஒரக்காட்டுப்பேட்டை பாலம் கட்டும் பணி தொடங்குவது எப்போது?

உத்தரமேரூர் ஆக, 25
உத்தரமேரூர் தொகுதிக்குள்பட்டது ஒரக்காட்டுப்பேட்டை கிராமம்.
இக்கிராமத்தில் இருந்து காவித்தண்டலம், கலியபேட்டை, காவணிபாக்கம்,
பேரணக்காவூர், தண்டரை, ராஜம்பேட்டை, திருவாணைக்கோயில், மிளகர்மேனி, மாம்பாக்கம், மண்டபம், காவூர், சீத்தனஞ்சேரி, சாத்தஞ்சேரி உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். நெல், கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட
விளைப்பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. விளைப்பொருட்கள் விற்பனைக்காக கிராம மக்கள் செங்கல்பட்டிற்குதான் செல்ல வேண்டும். இது மட்டுமின்றி இடைப்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒரக்காட்டுப்பேட்டை கிராமம் அருகில் உள்ள பாலாற்றை கடந்து செல்ல வேண்டும். இந்த பாலத்தை கடந்து சென்றால் செங்கல்பட்டிற்கு வெறும் 6 கி.மீ தொலைவு மட்டும்தான் ஆனால் மழைக்காலங்களில் அரும்புலியூர் வழியே செங்கல்பட்டுக்குச் சென்றால் சுமார் 15 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் கர்பிணிப்பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் சிறமத்திற்குள்ளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தாங்கள் தங்கள் போக வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் போக முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ஒரக்காட்டுப்பேட்டை பாலாற்றில் பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஒர்காட்டுப்பேட்டை பாலாற்றில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக 2012-ஆம்
ஆண்டு உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்
வலியுறுத்தினார். அதை தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த மாவட்ட
ஆட்சியர்கள் கூட்டத்தில் அப்போதைய ஆட்சியர் லி.சித்ரசேனன்
ஒரக்காட்டுப்பேட்டை பாலம் தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசி, பாலம் அமைக்க ஒப்புதல் பெற்றார். பின்பு இப்பணிக்காக ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது மழைக்காலம் தொடங்கவிருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மீண்டும் அவதிப்படும் நிலை உள்ளது.  இது குறித்து அரசு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது மணல் சோதனை முடிந்து அரசுபரிந்துறைக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் எனக்கூறினார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இடைப்பட்ட கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

No comments