Disqus Shortname

இலவச மருந்துவ முகாம்

உத்திரமேரூர் ஆக,28

உத்திரமேரூர் சோழா  அரிமா சங்கம் சார்பில் நேற்று தளவராம்பூண்டி
கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. இதில்
டாக்டர்கள் சுப்பிரமணியன், மொஹதீன், பரமசிவம், ஆனந்த், திவாகர்வாசுதேவன் ஆகியோர் மூலம் 227 நபர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அபெக்ஸ் நிறுவனம் சார்பில் 20 ஆயிரம் மதிப்பில் மருந்து, மாத்திரைகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் அரிமா சங்க தலைவர் கே.சங்கரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் முன்னிலை வகித்தார். அரிமா சங்க செயலாளர் ஆர்.நீலகண்டன் வரவேற்றார். எஸ்.தயாளன் முகாமை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். அரிமா சங்க பொருளாளர் ஆர்.ஆறுமுகம் நன்றி கூறினார்.

No comments