Disqus Shortname

உத்தரமேரூர் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு: கற்பூரம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்

உத்தரமேரூர் ஆக,27
உத்தரமேரூர் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுவாமி குடிகொண்டுள்ளதாக மக்கள், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

உத்தரமேரூர் அடுத்த காரியமங்கலம் கூட்ரோடில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நேற்று மாலை விறகு பொறுக்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் அவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. உடனே அந்த பாலை கையில் ஏந்தி சுவைத்து பார்த்தார். இனிப்பாக இருந்தது. ஒரே ஆச்சரியம். பொதுவாக வேப்ப மரத்தின் பால் கசக்கும். ஆனால் இந்த மரத்தில் பால் இனிப்பது குறித்து  தனது கிராமத்துக்கு சென்று அனைவரிடமும் கூறியுள்ளார்.

இதை அடுத்து அதிசய வேப்ப மரத்தை கிராம மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவர்களும் பாலை சுவைத்து பார்த்தனர்.மேலும் இந்த சம்பவம் காட்டு தீ போல பரவ, பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் திரண்டு வந்து பார்த்தனர். இந்த மரத்தில் சுவாமி இருப்பதாக ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வணங்கி சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வேப்ப மரத்தில் பால் வடிவது ஆச்சரியமாக உள்ளது. அதுவும் அதன் பால் இனிப்பது இன்னும் ஆச்சரியமாக உள்ளது. இந்த மரத்தில் சுவாமி இருப்பதால்தான் இப்படி வருகிறது. அதனால்தான் கற்பூரம் ஏற்றி வழிபட்டோம்‘ என்றனர்.

No comments