Disqus Shortname

இராஜிவ்காந்தி பிறந்த நாள்விழா

உத்தரமேரூர் ஆக,20
உத்தரமேரூர் அடுத்த பெற்பந்தல் கிராமத்தில் இராஜிவ்காந்தியின் 70-வது
பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் காஞ்சி
மாவட்ட கமிட்டி வர்த்தக பிரிவு செயலாளர் ஏ.வி.வேலு தலைமை தாங்கினார்.
காஞ்சி மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் கனகராஜ் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கமிட்டி எஸ்.சி பிரிவு தலைவர்
எஸ்.உமாசாசாவிசாமிவே முன்னிலை வகித்து கட்சி கொடியினை ஏற்றினர்.
நிகழ்ச்சியில் பெற்பந்தல்  அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் 70
பேருக்கு நோட்டு, பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டது. கிராம மக்களுக்கு
இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒன்றிய மகளிர் அணி வர்த்தக பிரிவு
இணைச்செயலாளர் கிருபைமேரி, மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இதே போல் சாலவாக்கத்தில் நடைப்பெற்ற விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தெய்வசிகாமணி, முன்னிலை வகித்தனர். அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநிலத்தலைவர் எம்.உசேன் தலைமை தாங்கி ராஜிவ்காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.