Disqus Shortname

உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன ஆக்கிரமிப்பால் நோயாளிகள் அவதி

உத்தரமேரூர் ஆக,27
உத்தரமேரூரில் பஜார் வீதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. இந்த
மருத்துவமனைக்கு உத்தரமேரூர் அதைச் சுற்றியுள்ள ஆனைப்பள்ளம்,
சோமநாதபுரம், திருப்புலிவனம், மருதம், மருத்துவான்பாடி, மல்லியங்கரனை,
பருத்திக்கொள்ளை, ஆ.பி.சத்திரம், நல்லூர், வாடாநல்லூர், பட்டஞ்சேரி,
வேடபாளையம் உள்ளிட்ட 70-க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் இங்கு
சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார் 800
மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை நுழைவாயிலில் நோயாளிகள் வாகனங்களை நிருத்த இடம் உள்ளது. இந்த இடத்தில் உத்தரமேரூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உத்தரமேரூக்கு வந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை
நிருத்த இடமின்றி தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி அவசர ஊர்தி
(ஆம்புலன்ஸ்) நோயாளிகளை ஏற்றி வருவதற்கு கூட மிகவும் சிறமமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இவ்வாகனங்களை அப்புறப்படுத்தி தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனை நுழைவாயிலில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களது வாகனங்களை

No comments