Disqus Shortname

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

 எல்.எண்டத்தூரில் கிராம சபை கூட்டம்

உத்தரமேரூர் ஆக,15

உத்தரமேரூர்  அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தில்  நேற்று கிராம சபை
கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்
முனியம்மாள்சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் மாவட்ட
குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயசங்கர் முன்னிலை
வகித்து சிறப்புரையாற்றினார். இதில் இக்கிராம மக்களுக்கு  ஏற்படும் வீடு,
நிலம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும்
பிரச்சனைகள் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது பற்றியும் இக்கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்திடவும், மின்சாரத்தை சேகரிக்கவும் தனிநபர் கழிப்பிடம் கட்டாயம் அமைத்திடவும் என கிராம மக்களிடம் வலிறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தில் கிராமமக்கள் சமூதாய கூடம் அமைத்தல், குளம் சீரமைத்தல், புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் தேவை கிளை அஞ்சலக கட்டிடம் தேவை என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சமூதாய கூடம், குளம் சீரமைத்தல், ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவை ஒரே வருடத்தில்  கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற கவுன்சிலர் ரவி, வட்ட சட்ட பணிகள் குழு
மூத்தநிர்வாக உதவியாளர் இராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள்  கிராமமக்கள்
கலந்துக்கொண்டனர்.

புலிவாய் கிராமத்தில் கிராம சபை கூட்டம்


சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் கிராம சபைக்
கூட்டம் நடந்தது. இதில் உத்தரமேரூர் அடுத்த புலிவாய் கிராமத்தில் நடந்த
கிராம சபைக் கூட்டத்தில்  ஊராட்சி மன்றதலைவர் இராஜ்குமார் தலைமை
தாங்கினார். காஞ்சி மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் முன்னிலை
வகித்தார். இக்கூட்டத்தில் தனி நபர் கழிப்பிடம் அமைத்தல், மழைநீர்
சேகரிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்
சிறுகுறு விவசாயிகள் பயனடைதல், குடிநீர் சேமிப்பு  மின்சார சேமிப்பு
போன்றவற்றை பற்றி கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முழு நேர
நியாயவிலை கடை ஊழியர் தேவை, தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம்
உயர்த்தவும் குடிநீர் வசதி தொகுப்பு வீடுகள், வீட்டுமனைப்பட்டா, ஆகிய
கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஒன்றிய குழு உறுப்பினர் ஏகாம்பரம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

No comments