Disqus Shortname

உத்தரமேரூரில் ஜெயலலிதா பிறந்தநாள் 24-ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு பாசறை சார்பில் தங்கமோதிரம் அணிவிப்பு

உத்தரமேரூர் பிப்-25  
உத்தரமேரூர் அரசு மருத்துவமனையில்  ஜெயலலிதா 65 –வது பிறந்தநாள் விழவை முன்னிட்டு 24-ம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட கழக செயலாளர் டி.சந்திமௌலி வழங்கிய 4 தங்க மோதிரங்களை காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி.சோமசுந்தரம் வழங்கினார்.  உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு பால், ரொட்டி, பழம், பிஸ்கெட்டுகள் ஆகியவைகளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கினார்.  இவ்விழாவில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.  ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, மாவட்ட மன்ற இணைச்செயலாளர்கள் கே.தயாளன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என்.ஆர்.பழனி, மாவட் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கே.கங்காதரன், நகர செயலாளர் கே.லட்சுமணன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இ.தயாளன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு, சத்யாநரசிம்மன், பொ.சசிகுமார், அத்தியூர் மேல்தூளி ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.அரிகிருஷ்ணன், மானாம்பதி கண்டிகை லூசியாஜேம்ஸ், மகளிர்அணி அற்புதம், ஒன்றிய மாணவரணி செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி, மானாம்பதி பி.வில்வபதி, நாஞ்சிபுரம் நந்தகோபால், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒழையூர் ஆர்.நாராயணசாமி, கம்மாளம்பூண்டி சந்திரபாபு, அம்மையப்பநல்லூர் கோவர்தனன், திருப்புலிவனம் கார்வண்ணன், வி.பி.சதீஷ், பி.குணா, ராஜ்குமார், இளையராஜா, ஒன்றிய கழக அவைத்தலைவர் சுப்புரெட்டியார், பாசறை துணைச்செயலாளர் ஆர்.ஜெயபாலன், கிளைச்யெலாளர் டி.துலுக்கானம், ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளர் பி.ஜி.ரஞ்சித், அ.பி.சத்திரம் பெருமாள், எம்.துரைபாபு, சி.எம்.விஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments