Disqus Shortname

திமுக இளைஞர் எழுச்சி நாள்விழா பொதுக்கூட்டம்

 உத்தரமேரூர் மார்ச்-19
உத்தரமேரூர் தாலுக்கா, தோட்டநாவல் கிராமத்தில் திங்கட்கிழமையன்று ஒன்றிய திமுக இளைஞர் எழுச்சி நாள்விழா பொதுக்கூட்டம் நடந்தது.  திமுக ஒன்றிய ஒன்றிய கழக செயலாளர் இரா.நாகன் தலைமை தாங்கினார்.  தோட்டநாவல் கிளைசெயலாளர் வி.மனோகரன், ஆலஞ்சேரி து.தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர்.  கிளைக்கழக செயலாளர் பி.கோதண்டன் வரவேற்றார்.  தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன், மாவட்ட அவைத்தலைவர் .சுந்தர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஞானசேகரன், ஒன்றிய துணைச்செயலாளர் டி.குமார், ஒன்றிய அவைத்தலைவர் .கே.சீத்தாராமன், பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், விவசாய அணி டி.பாபு, கோ.தவனகிரி உட்பட பலர் சிறப்புரையாற்றினார்கள், இரா.மணி நன்றி கூறினார்.

No comments