Disqus Shortname

கருவேப்பம்பூண்டியில் 5 லட்சத்தில் கட்டப்பட்ட தலைமை ஆசிரியர் கட்டிடத்தை எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் திறந்துவைத்தார்

உத்தரமேரூர் மார்ச்-19
உத்தரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ரூ.5 லட்சம் மதிப்பில் தலைமை ஆசிரியர் அறை கட்டிட திறப்பு விழா நடந்தது.  காஞ்சி முதன்மை கல்வி அலுவலர் பெ.அமுதவள்ளி, ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், கருவேப்பம்பூண்டி  ஊராட்சி மன்றத்தலைவர் கௌரிமுனுசாமி முன்னிலை வகித்தனர்.  பள்ளித்தலைமை ஆசிரியர் தெ.தனசேகரன் வரவேற்புரையாற்றினார்.  உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி தலைமை ஆசிரியர் கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காந்தாதருமன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, கிழக்கு ஒன்றிய கழக செலாளர் கே.பிரகாஷ்பாபு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.இராஜேந்திரன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் இ.பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி.விஜயலட்சுமி, வட்டார  வளமைய ஆசிரியர் பயிற்றுனர் எம்.சுரேஷ்பாபு மற்றும் களியாம்பூண்டி தங்க பஞ்சாட்சரம், எம்.கே.பி.வேலு, மாவட்ட கவுன்சிலர் சுமதி குணசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அவைத்தலைவர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழக பொருளாளர் வி.அண்ணாதுரை, மேனலூர் வேலாயுதம், தண்டரை தணிகைவேல், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.முருகன், ஒன்றிய பாசறை செயலாளர் டி.சதீஷ், ஒன்றிய கழக துணைச்செயலாளர் ஆர்.புருஷோத்தமன், ஆதவப்பாக்கம் ராமன்,  கன்னிகுளம் பி.ஜி.ரஞ்சித், கே.கங்காதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கே.சேகர், துணைச்செயலாளர் எஸ்.சேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.கார்வண்ணன், டி.ஆனந்தன், வனிதாமுருகன், அ.பி.சத்திரம் பெருமாள், சத்யாநரசிம்மன், புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி, பொ.சசிகுமார், சதீஷ், பி.குணா, ராஜ்குமார், உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.