Disqus Shortname

உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

உத்தரமேரூர் மார்ச்-5 
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆளுநரின் சிறப்பு வருகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உத்தரமேரூர் எஸ்.எஸ்.ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்தது. அரிமா சங்கத்தலைவர் யு.அமரத்லால் தலைமை தாங்கினார்.  சாசனத்தலைவர் டாக்டர் சி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.  செயலாளர் கே.வி.சேகர் வரவேற்று அறிக்கை வாசித்தார்.  உதவித் தலைவர் கே.சங்கரன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.  மாற்றுத்திறனாளி மாணவருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை, அரிசி, கோதுமை மாவு, கண்தானம் வழங்கிய எம்.ஜெகதீசன், கே.கோவிந்தம்மாள் குடும்பத்தினர்களுக்கு சான்றிதழ் நினைவு பரிசுகள், கலைநிகழ்ச்சிகள் நடத்திய மணித்தோட்டம் சர்வசேவா பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகளை அரிமா சங்க மாவட்ட ஆளுநர் எம்.ஜி.ரவிச்சந்திரன் வழங்கி உத்தரமேரூர் சோழா அரிமா சங்கத்தினை பாராட்டி பேசினார். இவ்விழாவில் மாவட்ட செயலாளர் டாக்டர்.எம்.கள்ளழகர், வட்டார தலைவர் ஜி.தீனதயாலு, ஆளுநர் வருகை மாவட்ட தலைவர் ஆர்.விஜயகுமார், மாவட்ட தலைவர்கள் டாக்டர் கே.பரமசிவம், ஆர்.கணேஷ் ஸ்ரீனிவாசன், டி.கே.கோபாலகிருஷ்ணன், இரா.கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.  சங்க பொருளாளர் டாக்டர் பி.ஆனந்த் நன்றி கூறினார்.

No comments