Disqus Shortname

உத்தரமேரூரில் அங்காளபரமேஸ்வரி மயானக்கொல்லை உற்சவம் சிறப்பாக நடந்தது.

உத்தரமேரூர் மார்ச்12 
உத்தரமேரூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சிவராத்திரி அன்று பூங்கரகம், சக்தி கரகம், அக்கினி கரகம், மேலக்கச்சேரி, சிலம்பாட்டம், கரகாட்டம், விளயான்புமேளம் மங்கலவாத்தியத்துடன் புஷ்ப விமான பல்லக்கில் அலங்காரத்துடன் உற்சவ அம்மன் திருவீதி உலா,  சிறப்பாக நடந்தது. 11-ம் தேதி திங்கட்கிழமையன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு மேல் அன்னையின் மகிமையை கண்ணுரும் வகையில் பக்தர்களின் மெய்சிலிர்க்கவைக்கும் பிராத்தனை வழிபாடுகளுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு 8மணி அளவில் மயானக்கொல்லை உற்சவம்மிக சிறப்பாக நடந்தது.  ஒவ்வொரு வீதியிலும் பொது மக்கள் பக்தர்களுக்கு மோர், இளநீர். தயிர் சாதம். வழங்கினார்கள். முதுகில் அலகு குத்தி பக்தர்கள் லாரி. வேன். டாட்டோ சுமோ மினி லாரி ஆட்டோ, மேலும் டிராக்டரில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் 10 பேரும் அவர்களை இழுத்து வந்த பக்தர்கள் 8 பேரும் மெய்சிலிர்க்கும்  காட்சியாக இருந்தது. 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.   விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் என்.மணி, இ.சம்மந்தன், கே.முருகன், வி.கே.முருகேசநாட்டார்கள் செய்திருந்தனர்.

No comments