Disqus Shortname

உத்தரமேரூரில் மதிமுக பூரண மதுவிலக்கு பிரச்சார நடைபயண பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் பிப்-28  
காஞ்சிபுரம் மாவட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அண்மையில் பூரண மதுவிலக்கு பிரச்சார நடைபயணம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் உத்தரமேரூர் இராஜகோபால் பேருந்துநிலையத்தில் நடந்தது.  மாவட்ட கழக துணைச்செயலாளர் ஜி.கருணாகரன் வரவேற்றார்.  ஒன்றிய செயலாளர்கள் எஸ்.தயாளன், எல்.மணிவண்ணன், வழக்கறிஞரணி கே.சங்கரன், ஒன்றிய அவைத்தலைவர்கள் கே.பார்த்தசாரதி, டி.வீரராகவன் முன்னிலைவகித்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் செயலாளர் தளபதி க.சோமு தலைமை தாங்கினார்.  கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா, மாவட்ட கழக நிர்வாகிகள் உதயம் கோ.இராதா, கே.பி.ராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ. காஞ்சிபுரத்திலிருந்து நடைபயணமாக ஆர்ப்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, கருவேப்பம்பூண்டி, திருப்புலிவனம் வழியாக உத்தரமேரூர் வந்து நடைபெற்ற கூட்டத்தில் வை.கோ.பேசியதாவது பேரறிஞர் அண்ணாவின் கட்டளைகள் மக்களிடம் செல், மக்களிடம் இரு, மக்களுக்காக உழைத்திடு என்ற கட்டளைப்படி தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் என்று நடைபயணமாக மக்களை சந்தித்து வருகின்றேன்.  உத்தரமேரூர் வழியே வரும்போது மகளிர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.  இதற்கு முன்பு பேசியவர் திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் இலவசங்களை கொடுக்கும்போது அதில் அவர்களது படம் அவசியம் இருக்கும்.  ஆனால், பிராந்திகடையில் உள்ள பாட்டில்களில் அவர்களது படம் ஏன் வைக்கவில்லை என்று கூறினார்.  மதுக்கடையை முழுமையாக அழிக்க வேண்டுமென்றால் நீங்கள் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும்.  மது அருந்துவதால் குடும்பத்தில் சண்டை, வாக்குவாதத்தில் அடிதடி.  வீண் குழப்பங்கள் தோன்றி பணம் செலவழிப்பது மட்டுமல்லாமல் உடலில் முழுபங்கு கிட்னி பாதிக்கப்படும்.  அதற்கு சிகிச்சை செலவு செய்வதற்கு ஒரு நாள் பெட் கட்டணம் 2 ஆயிரம் கட்டவேண்டும்,மருந்து ஊசி, மாத்திரைகள் ஒரு நாளைக்கு 1500 க்கு மேல் செலவாகும்.    ஆகவே, நீங்களே திருந்தி மதுப்பழக்கத்தை அரவே விடவேண்டும் என்று கூறினார் வை.கோ. கே.சங்கரன் நன்றி கூறினார்

No comments