Disqus Shortname

அதிமுக நிர்வாகிகள் மாற்றம்: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளரானார் எம்.எல்.ஏ., வாலாஜாபாத் பா.கணேசன்

அதிமுக நிர்வாகிகள் சிலரை மாற்றி முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மகளிரணி செயலாளரான கோகுலஇந்திரா, அமைப்புச் செயலாளாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரான என்.ஆர்.சிவபதி, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரான ஆர்.மனோகரன், புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.எஸ்.விஜய், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரான எஸ்.சி.ஏழுமலை, வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆர்.வில்வநாதன், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் செயலாளரான எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக மகளிர் அணிச் செயலாளரான எஸ்.கோகுல இந்திரா, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.சோமசுந்தரம் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ., வாலாஜாபாத் பா.கணேசன் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.