Disqus Shortname

பச்சை நிறமாக மாறியது உத்திரமேரூர் ஏரி நீர்

உத்திரமேரூர்ஜன.6–, : 
புகழ்ப்பெற்ற உத்திரமேரூர் ஏரியில் திடீரென நிறமாற்றம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைரமேகத்தடாகம்  என்று அழைக்கப்படும் உத்திரமேரூர் ஏரியானது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகவும்  ெபரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டும், பல்வேறு  காரணங்களால் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த ஏரியில் இருந்து 6 மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீரானது 18 கிராமங்கள் உள்ளடக்கிய 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட ஏதுவாக இருந்து வந்தது. இதில் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிர் மற்றும் கரும்பு வேர்க்கடலை ஆகியவைகளை பயிரிடுவர். பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த ஏரி பயனுள்ளதாக இருந்தது. ஆனால்  கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப்போன காரணத்தால், உத்திரமேரூர்  பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடு வெகுவாக ஏற்பட்டு வந்தது.  இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், உத்திரமேரூர் ஏரியில் 5  ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உத்திரமேரூக்கு குடிநீர்  விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்,  கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஏரியில் இருந்து வெளியேறிய  உபரிநீர்,  ஏரிநீர் தெளிவாக காணப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென ஏரிநீர் பச்சை  நிறமாக மாறி, லேசான துர்நாற்றத்துடன் வயல்வெளிகளில் பாய்ந்து வருகிறது.  இந்த பச்சை நிறத்துக்குக் காரணம் தெரியாமல் விவசாயிகள் குழம்பி  வருகின்றனர். இந்த நிறமாற்றம் காரணமாக கால்நடைகளை கொண்டு செல்வோர்  மற்றும் ஏரிகளில் மீன் பிடிப்பவர்கள், ஏரிகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி  வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏரியில் மக்கி கிடந்த செடிகளால், இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என, ஒரு சிலர் கூறுகின்றனர் சிலர்  ஏரி நீரில் ஏதாவது ரசாயன  கழிவுகள் கலந்துள்ளதா? அல்லது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும்  கழிவுநீரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?’’  என்று புரியாமல் தவிப்பதாகவும், ஆனால், ஏரி நீரின் நிற மாற்றத்தால், ஏரியில் வாழும் நீர் வாழ் உயிரிகளுக்கோ, நீரை அருந்தும் கால்நடைகளுக்கோ இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை  இந்த பச்சை நிற நீரால் தாங்கள் பெருமளவில் செலவு செய்து வைக்கும் பயிர்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று புரியாமல் அச்சத்தில் உள்ளோம்.  எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த நீரினை முறையாக  பரிசோதித்து, நிற மாற்றத்திற்கான காரணம் தெரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு விவசாயிகள், விவசாயத்துறையினர் மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments