Disqus Shortname

மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகளில் சுற்று சுவர் திறப்பு

உத்திரமேரூர் ஜன, 07
   உத்திரமேரூர் தாலுக்கா களியாம்பூண்டி கிராமத்தில் நேற்று 83 லட்சம் மதிப்பில் பல்வேறு சுற்று சுவர்கள் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் கமலக்கண்ணன், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, அண்ணாமலை, ஒன்றிய குழு உறுப்பினர் தங்கபஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வேலு அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு 54 லட்சம் மதிப்பில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி சுற்று சுவர், 10 லட்சம் மதிப்பில் களியாம்பூண்டி கால்நடை மருத்துவமனை சுற்று சுவர், 19 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் சுற்று சுவர், மற்றும் 19 லட்சம் மதிப்பில் அரசினர் நடுநிலைப்பள்ளியின் சுற்று சுவர் ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் துணை தலைவர் ரவிசங்கர், தென்னேரி என்.எம்,வரதராஜீலு கிருஷ்ணமூர்த்தி, டில்லிபாபு, முனிரத்தினம், பெருநகர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments