Disqus Shortname

மலையாங்குளம் ஏரியில் உடைப்பு: பயிர்கள் நாசம்

  உத்திரமேரூர்   ஜன.6–

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.

ஏரிக்கரை உடைந்தது


உத்திரமேரூர் அருகே உள்ள மலையான்குளத்தில் ஏரி உள்ளது. இதன் மூலம் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வந்தன. இந்த நிலையில் பாசனத்துக்காக ஏரியின் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென மதகின் அருகில் உள்ள ஏரிக்கரை உடைந்தது. இதனால் தண்ணீர் வேகமாக வெளியேறி விவசாய நிலத்துக்குள் பாய்ந்தது.

இதில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நேற்று(செவ்வாய்க்கிழமை )  காலை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோரிக்கை

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரிசெய்தனர். இதனால் தண்ணீர் வீணாவது நிறுத்தப்பட்டது.

உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஏரி உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments