Disqus Shortname

மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

 உத்திரமேரூர் ஜன, 16
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள மீனாட்சி பாலிடெக்னிக் கல்லூரியில் அல்ரா டெக் சிமெண்ட் நிறுவனமும், கல்லூரியும் இணைந்து இருநாட்கள்  வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது, முகாமினை  கல்லூரி முதல்வர் ந.கவிராஜன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார், கல்லூரி நிர்வாக அலுவலர் வாசு முன்னிலை வகித்தார், சென்னை அல்ரா டெக் சிமெண்ட் மண்டல இயக்குனர் வெங்கட்ராமன் வேலை வாய்ப்பு தொழில் நுணுக்கங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சியளித்தார் கட்டுமான இடங்களை  பார்வையிட்டு கடடுமான  செயல்முறைகளை  விளக்கி கூறப்பட்டது, கட்டிடவியல் துறை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர் விழா முடிவில் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் நன்றி கூறினார்

No comments