Disqus Shortname

உத்திரமேரூரில் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாள் விழா

உத்திரமேரூர் ஜன,17
 உத்திரமேரூர் ஒன்றிய தே.மு.தி.க சார்பில் எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாள்
விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய
செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட
துணைச்செயலாளர் வி.பி.ஜான், மாநில துணை தலைவர் ஏ.சர்தார் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள எம்.ஜி.ஆரின்
திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு
இனிப்புகள் வழங்கினர். விழாவின் போது பட்டாங்குளம், தட்டாம்பூண்டி
பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 26 பேர் தே.மு.தி.கவில் இணைந்தனர்.
மேலும் தே.மு.தி.க நிர்வாகிகள் அணைவருக்கும் அடயாள அட்டை வழங்கப்பட்டது.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.