Disqus Shortname

கூட்டுறவு கடன் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம்

உத்தரமேரூர் ஜன 09.
உத்தரமேரூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் வி.ஆர்.அண்ணாமலை தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். துணைத் தலைவர் பொ.சசிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சங்கத்தின் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2014-2015-ஆம் ஆண்டில், சங்கத்தின் நிகர லாபம் ரூ. 2.78 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. முடிவில், சங்கத்தின் முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

No comments