Disqus Shortname

உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் போராட்டம்:

உத்திரமேரூர் ஜன, 07

உத்திரமேரூர் பகுதி கரும்பு விவசாயி களை படாளம் கூட்டுறவு ஆலையில் இணைக்கக் கோரி, வரும் 7-ம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள், பழையசீவரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு வழங்கி வருகின்றனர். ஆனால், கரும்புக்கான கூலி, தரமான விதைகள் விநியோகம், சரியான நேரத்தில் அறுவடை போன்றவற்றை தனியார் கரும் பாலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதனால், மதுராந்தகம் வட்டம் படாளத்தில் செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என உத்திரமேரூர் கரும்பு விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,இன்று 

  7-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சங்கத்தின் மாவட்ட செயலாளர் நேரு கூறியதாவது: கரும்புக்கான நிலுவை தொகையான ரூ.11 கோடியை, கடந்த நவம்பர் 7-ம் தேதிக்குள் வழங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது தனியார் ஆலை நிர்வாகம் உறுதியளித்தது.
ஆனால், இதுவரை ரூ.7 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. சிறப்பு பட்ட கரும்புகளையும் அரைக்கவில்லை. 2015-16ம் ஆண்டுக் கான முதன்மை சீசன் அரவை இல்லை எனவும் அறிவித் துள்ளது. அதனால், தனியார் ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1 லட்சம் டன் கரும்புகளை படாளம் ஆலையில் வழங்கும் வகையில், உத்திரமேரூர் விவசாயிகளை படாளம் கூட்டுறவு ஆலையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.
உத்திரமேரூர் விவசாயிகள் ஏற்கெனவே கூட்டுறவு ஆலையில் உறுப்பினராக உள்ளனர். இதுதொடர்பாக, கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தினாலும் எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அவர் கூறினார்

No comments