Disqus Shortname

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள்

காஞ்சீபுரம் ஜனவரி 21,2016,,
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 35 லட்சத்து 80 ஆயிரத்து 978 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2016–க்கான இறுதி வாக்காளர் பட்டியல் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது.

 இந்த இறுதி வாக்காளர் பட்டியல், மறு பதிப்பு தாய் பட்டியல் துணைப்பட்டியல்–1 ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கஜலட்சுமி நேற்று காலை வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் துறை அதிகாரி சவுரிராஜன், கலெக்டரிடம் இருந்து பெற்று கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 15–9–2015 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 71. நேற்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தம் 35 லட்சத்து 80 ஆயிரத்து 978 வாக்காளர்கள் உள்ளனர்.
 உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 391 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 171 பெண் வாக்காளர்கள், 10 இதரர் என்று 2 லட்சத்து 42 ஆயிரத்து 572 வாக்காளர்கள் உள்ளனர்.

No comments