Disqus Shortname

உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட விருப்ப மனு


சென்னை, ஜன. 30–
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. ஆனால், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ள பா.ம.க., அக்கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யையும் அறிவித்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வருகிறார். பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதால், சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எந்த தொகுதியில் போட்டி?

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தர்மபுரி தொகுதி எம்.பி.யாக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற தேர்தலில் அதே பாராளுமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுவாரா? அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்  தர்மபுரி, மைலம், சோழிங்கர், உத்திரமேரூர், அணைக்கட்டு, பென்னாகரம், மேட்டூர், குறிஞ்சிப்பாடி, செய்யார், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் தான் அன்புமணி பெயரில் அதிகம் பேர் மனு செய்துள்ளார்கள்.
 அன்புமணி ராமதாஸ் போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால் அவரது பெயரில் 217 பேர் மனு கொடுத்துள்ளார்கள்.
அதற்கு அடுத்ததாக ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, குரு ஆகியோரது பெயரிலும் அதிக அளவில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments