Disqus Shortname

1.75 கோடி மதிப்பில் ஆமை வேகத்தில் சாலைப்பணி கிராம மக்கள் தொடர்ந்து பாதிப்பு

உத்திரமேரூர் , 06 உத்திரமேரூர் அடுத்த ஆள்வராம்பூண்டி, நாஞ்சிபுரம், இருளர்காலனி,
மேட்டுக்கொல்லை, காட்டுக்கொல்லை, தட்டாம்பூண்டி, பாப்பநல்லூர்,
ஆகிய கிராமங்களில் சுமார் 6000-த்திற்கும் மேற்பட்ட மக்கள்
வசிக்கின்றனர். காவனூர்புதுச்சேரி கூட்ரோடு முதல் பாப்பநல்லூர் பிரதான
சாலை வரையில் சுமார் 6கி.மீட்டர் கொண்ட இந்த சாலையை ஆள்வராம்பூண்டி,
நாஞ்சிபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில்
இச்சாலையை சீரமைக்க கிராம மக்கள் தொடந்து கோரிக்கை விடுத்து வந்தனர் இதன்
பேரில் புதியதாக சாலை அமைக்க கடந்த 2013 ஆம் ஆண்டு ரூபாய் 1கோடியே
75லட்சம் ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதன் காரணமாக
இந்த சாலை முழுவதுமாக பெயர்த்து எடுக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணி
மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது சுமார் இரண்டு
வருடங்களுக்கு மேல் ஆகியும் இது வரை சாலை அமைக்கும் பணி முடிவடையவில்லை.
இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் மீண்டும் சேதமடைந்து
தற்போது குண்டும் குழியுமாக மாறியது. இதனால் இந்த சாலை இடையே உள்ள
10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இக்கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல்
அவதிக்குள்ளாகின்றனர். வேலைக்கு செல்லும் ஊழியர்களும், வர்த்தகர்களும்
குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும்
சிறமப்பட்டு வருகின்றனர். தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகள் தங்களது
விவசாயத்திற்கான மூலப்பொருட்களை கூட எடுத்து செல்ல சிறமப்படுகின்றனர்.
இதுமட்டுமின்றி சாலை அருகில் உள்ள கால்வாய்களில் சாலை அமைப்பதற்கு மண்
எடுத்ததால் மெகா பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலையில் இரவு
நேரம் இருசக்கர வாகனப் பயணம் உயிர்க்கே ஆபத்தான சூழல் நிலவுகிறது. மேலும்
இச்சாலை வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்ட
முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மீறி ஓட்டி சென்றால் வாகனம் பஞ்சர்
ஆவதுடன் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு
வந்த மினிபேருந்துகள் கூட மழைக்குப்பின் இயக்கப்படுவதில்லை. இந்த
சாலையில் பிரயானம் செய்யும் முதியவர்கள், கர்பிணிப்பெண்கள் மிகவும்
சிறமத்துக்குள்ளாகின்றனர். இச்சாலை வழியே உள்ள கிராமங்களுக்கு அவசர ஊர்தி
கூட வர தயக்கம் காட்டுகின்றனர். சுமார் 6 மாதத்தில் முடிக்க வேண்டிய இந்த
சாலைப்பணியினை 2 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிக்காததால்
இவ்வழிதட கிராம மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்
இதுவரை எந்த அதிகாரிகளும் இது குறித்து எந்த நடவடிக்கை எடுத்தாக
தெரியவில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக போர்கால அடிப்படையில் சீரமைத்து
அருகில் உள்ள மெகா பள்ளங்களை முறையான கால்வாயாக அமைத்து தர கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments