Disqus Shortname

ஆசிரியைகளிடம் தகாத வார்த்தையில் பேசுவதால் வட்டார வள மைய மேற்பார்வையாளரை கண்டித்து உத்திரமேரூரில் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் Jan 9, 2016:
 உத்திரமேரூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 150 பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கவும், அடிப்படை வசதி நிறைவேற்றவும், இடர்பாடுகளை நீக்கவும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாபதி என்பவர், 150 பள்ளிகளுக்கு சென்று இந்த பயிற்சி அளிக்கிறார். இவ்வாறு பயிற்சிக்கு செல்லும் போது பெண் ஆசிரியர்களிடம் உமாபதி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், எதிர்த்து கேட்டவர்களை ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும், பள்ளியின் தேவைகளை நிறைவேற்ற லஞ்சம் கேட்பதாகவும், பல பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்றியதாக கூறி தவறான கணக்கு கொடுத்து பணம் கையாடல் செய்வதாகவும் பல குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதலமைச்சரின் தனிபிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரமேரூர் கிளை தலைவர் லியோ தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட முன்னாள் பொருளாளர் பர்னபாஸ் பால், ரவிசந்திரன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஹலோசிஸ் துரைராஜ் கண்டன உரையாற்றினார். அப்போது, வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமாபதியை பணிமாற்றம் செய்ய வேண்டும், பெண்களை தவறாக பேசியதற்கு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினர்.

No comments