Disqus Shortname

ஸ்ரீ நின்றகோடி நீர்வாழியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூா் ஜன 25.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா் தாலுக்கா நோணாம்பூண்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டு பழமைவாய்ந்த கோவில் ஸ்ரீ நின்றகோடி நீர்வாழியம்மன் கோவிலாகும். இந்த கோவில் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து ஆலயம் புணரமைப்புப்பணி நடந்து வந்தது. இப்பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமையன்று மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி, சனிக்கிழமைகளில் கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், லட்சுமி பூஜை, தனப்பூஜை, வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாகவேள்வி, கோபூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, நான்காம் கால யாகவேள்வி முடிந்த பின் ஞாயிற்றுக்கிழமையன்று காலை புனித நீர் கொண்டு வந்து கலசத்தின் மீது ஊற்ற கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. விழாவில் இந்து முன்னனி மாநில பொது செயலாளர் பரமேஸ்வரன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். கோவில் நிர்வாகி தேவன்பு, விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நோணாம்பூண்டி கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

No comments