Disqus Shortname

சமத்துவ பொங்கல் விழா

 மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
உத்திரமேரூா் ஜன, 14
 மீனாட்சி அம்மாள் கல்வி அறக்கட்டளையின்
கீழ் செயல்பட்டு வரும் உத்திரமேரூா் மீனாட்சி அம்மாள் குளோபல் உயர்நிலைப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளி முதல்வா் சாந்திபாலாஜி தலைமை தாங்கினார். பொங்கல் கொண்டாடுவதன் நோக்கம், அதன் சிறப்புகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ மாணவியா்கள் நடனம், கோலம், உறியடித்தல், கபடி, பாட்டி, கயறு இழுத்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவா்களும் சமத்துவ பொங்கலிட்டு இறை வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவனூர் புதுச்சேரியில் சமத்துவ பொங்கல்  விழா
 காஞ்சிபுரம்  மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரியில் நேற்று  பஸ்நிலையம் அருகே நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்கள், மற்றும் காவனூர் புதுச்சேரி கிராம மக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். புதுமண்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைய லிட்டனர். கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வைத்து பொங்கலை குதூகலமாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, காவனூர் புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை தலைவர் விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ் சசிகுமார், கனரா வங்கி மேலாளர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் போது கிராமக்கள் அனைவரும்  சூரிய பகாவனை வணங்கி வழிப்பட்டனர்.


No comments