Disqus Shortname

திராவிட கட்சிகளி்ன் ஊழல்கள் பற்றி பொதுகூட்டத்தில் இராமதாஸ் ஆவேச பேச்சு

காஞ்சிபுரம் ஜன 25. காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூா் கிழக்கு ஒன்றியம் சாலவாக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 2016 வரை தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சாலவாக்கம் பேரூந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜீ.கே.மணி, சக்தி கமலம்மாள் மாநில துணைபொதுச் செயலாளர் பொன்.கங்காதரன் வன்னியா் சங்க மாநில தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தனர் மாவட்ட தலைவா் சேஷாத்திரி, துணைத்தலைவா் பெ.குமாரசாமி, ஆகியோர் பேசினார்கள் காஞ்சி மாவட்ட செயலாளர் மகேஷ் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ்  கலந்து கொண்டு பேசியது 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது ஒழிப்பு, மக்கள் நீதிமன்றம் கொண்டு வரப்படும் யார் தவறு செய்தாலும் ஆறு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் உலக தரம் வாய்ந்த கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் அளிக்கப்படும் விவசாயிகளுக்கு விதை மற்றும் பூச்சி மருந்துகள் உடனே கிடைக்க வழி செய்யப்படும் இப்போது இளைஞர்கள் திராவிட கட்சிகளின் ஊழல்களை ஸ்மார்ட் போன்கள் மூலம் கண்டுபிடித்து விடுகிறார்கள் ஆதலால் இளைஞர்கள் ஓட்டு பா.ம.க.விற்க்குதான் என்று பேசினார் பா.ம.க. நிறுவனர்  மருத்துவர் ச.இராமதாஸ் இக்கூட்டத்தில் சிறுப்பினாயூர் ஊராட்சி மன்ற தலைவா் கலையரசன் உத்திரமேரூா் ஒன்றிய வழக்கறிஞா் செயலாளர் ஆறுமுகம் மாவட்ட வன்னியர் சங்கத்தலைவா் மதூர் சங்க தலைவா் குப்பன், தருமன், செந்தில், ராஜா. மணி, பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர் 

No comments