Disqus Shortname

போக்குவரத்துக்கு லாயக்கற்ற உத்திரமேரூர்-மேனலூர் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

உத்திரமேரூர் மார்ச், 07 :
 குண்டும் குழியுமான உத்திரமேரூர்-மேனலூர் பாரதிபுரம் சாலையை சீரமைக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த  மேனலூர் பாரதிபுரம் இடையேயான 4 கி.மீ சாலை உள்ளது. இந்த  சாலையை மேனலூர், காட்டுப்பாக்கம், பாரதிபுரம், காவனூர் புதுச்சேரி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காட்டுப்பாக்கம் அரசு பள்ளியை சேர்ந்த  மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் பள்ளிக்கு செல்கின்றனர். உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் ஊழியர்கள்  இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி உத்திரமேரூர்-மேனலூர் பாரதிபுரம்  சாலையை சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு பணி துவங்கியது. இதற்காக சாலையில் ஜல்லி கற்கள், மண் கொட்டி நிரவினர். அதன்பிறகு பல்வேறு காரணங்களால் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையால் இந்த சாலை மேலும் பழுதடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களும்  பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் பெண்களும்  கர்ப்பிணிகளும் முதியவர்களும் வாகன ஓட்டிகளும் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். உயிர்ச்சேதம்  ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பழுதடைந்துள்ள உத்திரமேரூர்-மேனலூர் பாரதிபுரம்  சாலையை உடனே சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ேகாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments