Disqus Shortname

தொல்லியல்துறை பிரச்சனை தீர்க்கப்பட்டது எம்.பி.விஸ்வநாதன் தகவல்

உத்தரமேரூர் ஜன-11
     உத்தரமேரூரில் சனிக்கிழமையன்று சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் பேசியது.  உத்தரமேரூர், காஞ்சிபுரம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் 300 மீட்டர் அளவில் புதிய கட்டிடங்கள் கட்ட கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது என்ற சட்டம் 2010-ல் அமுலாக்கப்பட்டது.   அதை ரத்து செய்யக்கோரி நான் முயற்சி எடுத்து 60 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி பிரதமரிடம் அளித்து உத்தரவை வாபஸ் வாங்கி மாமல்லபுரம் தலசயணபெருமாள் கோயிலை  மீட்டுதரப்பட்டது.  மேலும் குடிசைகளில் விளக்கு இல்லாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.  தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுங்கள் என்று கேட்டால் மின் இணைப்பு இல்லை என்று கூறுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எனக்கு உத்தரமேரூர் ஒன்றியத்தில் 14 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்த கூட்டணியில் இருந்த திமுகவினரை மறக்கமாட்டேன்.  நமது மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இரண்டு தலைவர்கள் உள்ளனர். 42 வயது இளைஞர் ராகுல்காந்தி பாரத பிரதமர் ஆவது நிச்சயம். மோடி பாட்சா பளிக்காது.  வாக்குச்சாவடி, வாக்காளர் பட்டியல் உங்கள் இல்லம் தேடிவரும் அவைகளை பரிசீலனை செய்து இளைஞர்களை நமது கட்சியில் சேர்க்கவேண்டும். நம் மாவட்டத்தில் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  அதில் 16லட்சம் பேர்தான் இருப்பார்கள். 10 லட்சம் பேர் வாக்களிப்பார்கள்.  நமது கட்சி கூட்டணியில் இருந்தாலும், தனியாக நின்றாலும் அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற இளைஞர்கள் பாடுபடவேண்டும்.  மாட்டு வண்டி தொழிலாளர்கள் என்னை சந்தித்து மாட்டுவண்டியையும், மாட்டையும் பிடித்துவைத்திருக்கின்றனர். நான் 200 மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் போராட்டம் நடத்த தயாராகஇருக்கிறேன்.  அவர்களது பிரச்சணையை தீர்த்துவைக்க தக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் எம்.பி.விஸ்வநாதன்.

No comments