Disqus Shortname

உத்தரமேரூரில் வைகுண்ட ஏகாதசி சுந்தரவரதராஜ பெருமாள் திருவடி பாதசேவை

உத்தரமேரூர் ஜன-11
     உத்தரமேரூரில் உலக பிரசித்திபெற்ற ஸ்ரீஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் சனிக்கிழமையன்று வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடந்தது.  குடவோலை முறை மூலம் பிரசித்திபெற்ற ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் உச்சந்தலை முதல் பாதம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சனிக்கிழமையன்று விடியற்காலை 3 மணி முதல் இரவு 7 மணிவரை  ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள் திருவடி பாதசேவையை வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் தான் சேவிக்கமுடியும். மாலை 5 மணியளவில் உற்சவர் ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள் கருடவாகனத்தில் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். ஸ்ரீவைகுண்டவரதர் கோவிலில் காலை சிறப்புபூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஆர்.சேஷாத்ரி செய்திருந்தார்.

No comments