Disqus Shortname

கட்டியாம்பந்தலில் சிறப்பு மருத்துவ முகாம் 347 பேருக்கு பரிசோதனை

உத்தரமேரூர் ஜன,04
உத்தரமேரூர் தாலுக்கா கட்டியாம்பந்தல் கிராமத்தில் சனிக்கிழமையன்று காஞ்சி மாவட்டம் புதுவாழ்வு திட்டமும், மீனாட்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினார்கள். கட்டியாம்பந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கே.ராஜா தலைமை தாங்கினார். மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் முதல்வர் என்.கவிராஜன் லியோ கிளப் ஒருங்கிணைப்பாளர், வி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவனுார் புதுச்சேரி புதுவாழ்வு திட்டம் அணித்தலைவர் லட்சுமணன் வரவேற்றார். உத்தரமேரூர்  சோழா அரிமா சங்க சாசனத்தலைவர்  டாக்டர் சி.சுப்பிரமணியன், டாக்டர் முகமது மொஹைதீன் மற்றும் காஞ்சி  மீனாட்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவர்  ஜி-சக்திகணபதி, பாலாஜி ஆகியோர் குழுவினர்களுடன்  இக்கிராமத்தில் வசிக்கும் 347 நபர்களுக்கு தோல், குழந்தைகள், கண், காது, தொண்டை, இரத்தகொதிப்பு, சர்க்கரைநோய் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். இம்முகாமில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இ.ஏழுமலை, ஊராட்சி செயலர் ஜீ.பாலசுப்பிரமணியன், வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.குமார், உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் இருதய மேரி நன்றி கூறினார்.

No comments