Disqus Shortname

உத்தரமேரூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் சேவை

உத்தரமேரூர் ஜன,01
உத்தரமேரூரில் அமாவாசை மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோவிலில் புதன்கிழமையன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்திருந்தனர் இரவு 11 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ  ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன்  ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல ஸ்ரீ மாரிமேற்கத்தி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலிலும் ஸ்ரீ இரட்டை தாளிஸ்வரர் ஆலயத்திலும் நடுத்தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.