Disqus Shortname

உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 483 மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜன.05
உத்தரமேரூர் மேற்கு ஒன்றியம் ஞாயிறன்று 483 பயனாளிகளுக்கும், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு வரவேற்றார்.  அத்தியூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஹரிகிருஸ்ணன் தலைமை தாங்கினார். சோழனுர் கிராமத்தில் 110,  மேல்துாளிகிராமத்தில் 214, அத்தியூர்கிராமத்தில் 159, பயனாளிகளுக்கு  உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார் இவ்விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிவிநாயகம், வாலாஜாபாத் சேர்மென் என்.எம் வரதராஜீலு, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கோட்டீஸ்வரன்,  திருவந்தவார் வி.முருகன், உட்பட பலர் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன் நன்றி கூறினார்.

No comments