Disqus Shortname

உத்தரமேரூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

உத்தரமேரூர் ஜன,19
உத்தரமேரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 134 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமை தாங்கினார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரெனிஷ் முன்னிலை வகித்தார் மானாம்பதி சமுதாய சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச் செல்வன் வரவேற்றார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் 5 வயதுக்குட்பட்ட உத்தரமேரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 13603 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.