Disqus Shortname

அரசாணிமங்கலத்தில் 2 கோவில்களில் திருட்டு

உத்தரமேரூர் ஜன.02
உத்தரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலம் கிராமத்தில் அடுத்தடுத்து 2 கோவில்களில் பூட்டை உடைத்து நகை பணம் திருடப்பட்டுள்ளது.   உத்தரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலம் கிராமத்தில்  200 வருடம் பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் ஆகும்.   இக்கோவிலை கடந்த 11.07.2007 ஆம் ஆண்டு ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து கோவிலை புதுப்பித்து  கும்பாபிஷேகம் செய்து. உண்டியல் வைத்துள்ளனர்.. இக்கோவிலில் அர்ச்சகர்  பாலாஜி தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சுவாமிக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து வருவார் புதன்கிழமையன்று வருட பிறப்பு என்பதால். பகல் நேரம் முழுவதும் கிராம மக்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிப்பட்டு சென்றனர். இரவு 9.30 மணிக்கு இக்கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்க்கு சென்றுவிட்டார். பூசாரி  வியாழக்கிழமை காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த  அர்ச்சகர்  பாலாஜி கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் விசாலாட்சி அம்மன் கழுத்தில் உள்ள 4 கிராம் தங்க செயினும் பொது மக்களால் வைக்கப்பட்ட உண்டியலும் காணவில்லை  இதை அடுத்து அருகில் இருந்த கன்னியம்மன் கோவிலில் விரைந்து சென்று பார்த்ததில் அங்கும் பூட்டு உடைக்கப்பட்டு   9 சிலைகளில் இருந்த 18 கிராம்  நகையும் அங்கிருந்த உண்டியலும்  திருடு போனது  தெரியவந்தது. பொது மக்கள் உடனடியாக உத்தரமேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  இது குறித்து  காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து   விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments