Disqus Shortname

மீனாட்சி அம்மாள் தொழில் நுட்ப கல்லுாரியில் லியோ கிளப் துவக்க விழா மற்றும் பொங்கல் விழா.

உத்தரமேரூர் ஜன,10
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழில் நுட்ப கல்லுாரியில்  லியோ கிளப் துவக்க விழா  மற்றும் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் அரிமா சங்க சாசனத்தலைவர் டாக்டர்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.  மீனாட்சி அம்மாள் தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர் கவிராஜன்  நிர்வாக அலுவலர் பலராமன் முன்னிலை வகித்தனர். லியோ கிளப் அமைப்பாளர் வி.இராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட ஆளுநர் எம்.எஸ்.முருகப்பாஔ லியோ கிளப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரிமா சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் வீராசாமி, பொருளாளர் மணி, வாழ்த்துரை வழங்கினர். லியோ கிளபில் 30 க்கும் மேற்பட்ட மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லுாரி  மாணவர்கள் இணைந்தனர். இதில் லியோ கிளப்பின் தலைவராக பஞ்சாட்சரம் செயலாளராக சோனியா காந்தி, பொருளாளராக ரேவதி நியமிக்கப்பட்டனர். இவ்விழாவின் போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முடிவில் எஸ்.மோகன் நன்றி கூறினார்.

No comments