Disqus Shortname

தனியார் பள்ளியைக் கண்டித்து சாலை மறியல்

உத்திரமேரூர் மார்ச்,07
உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் செஞ் ஜோசப்  உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1முதல் 10ஆம் வகுப்பு வரையில் ஆர்.என்.கண்டிகையை சுற்றி சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ–மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைப்பெற்று வரும் நிலையில் இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ-மாணவியர்களையும் விடுமுறை நாளான சனிக்கிழமையன்று  பெற்றோர் அனுமதியின்றி வயலூர் கூட்ரோடில் சமுதாயக் கூட்டத்தில் நடக்கவிருக்கும் ஜெப பிரார்த்தனை கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். என்றும் கலந்து கொள்ளாதவர்களுக்கு 50 ரூபாய் அபராதமும், தேர்விற்கான ஹால்டிக்கெட் கொடுக்கப்படமாட்டாது மற்றும் பள்ளி மூலம் அளிக்கப்படும் மார்க் குறைத்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகியான அந்தோணி மற்றும் பிரபு ஆகியோர் கட்டாயபடுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சமுதாய கூடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் உத்திரமேரூர் வந்தவாசி சாலை கூட்ரோடு அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த மதுராந்தகம் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையிலான பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments