Disqus Shortname

உத்திரமேரூரில் இமெயில் சேவை மையத்தை திடீர் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

உத்தரமேரூரில் புதன்கிழமையன்று இமெயில் சேவை மையத்தை காஞ்சி மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 உத்திரமேரூர் மார்,11
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 254 வட்டாட்சியர் அலுவலகங்களுள் பொது சேவை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மையம் மூலமாக கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எவ்வித சிரமமின்றி வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ் போன்றவற்றை பெற முடியும் இம்மையத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்கள் தேவைக்கு உரிய ஆவனங்களுடன் மனு அளித்தால் மட்டும் போதும் இம்மையத்தில் கணினி மூலம் விண்ணப்பத்தை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பதாரரின் கைபேசி எண்ணிற்கு குருந்தகவல் அனுப்பப்படும்.
மேலும் சான்றிதழில் பிழை இருந்தால் அதை உடனடியாக இம்மையத்தில் சரி செய்து கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமையன்று 8 இடங்களில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நிர்வாகிக்கப்படும். மேலும் மத்திய அரசின் சேவைகளான மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும்.
பான்கார்டு ஆதார்அட்டை பெற்று கொள்ளும் வசதி, தேர்தல் ஆணையத்தின் மூலம் அடையாள அட்டையின் நிறுத்தங்கள் செய்து கொள்ளும் வசதி,  தேர்வு படிவம் சமர்ப்பிப்பதற்க்கும் தேர்வு முடிவுகள் சரிபார்ப்பதற்க்கு போன்ற பல்வேறு வசதிகளை கொண்ட உத்தரமேரூர் மையத்தை காஞ்சி மாவட்ட ஆட்சியர்  வே.க.சண்முகம் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். பின்னர் பொது மக்களிடம் மனுக்கள் பெற்றார்.

No comments