Disqus Shortname

உத்திரமேரூர் மு.க.ஸ்டாலின் 63 பிறந்த நாள் விழா

உத்திரமேரூர் மார்.03

உத்திரமேரூர் பணிமனையில் தொ.மு.ச. சார்பில் மு.க.ஸ்டாலின் 63 பிறந்த நாளை
முன்னிட்டு பணிமனை வாயிலில் கழக கொடியினையேற்றி இனிப்புகள் வழங்கியும்
கொண்டாடப்பட்டது, விழாவில் தொ.மு.ச. துணை செயலாளர் து.சுந்தர் தலைமை
தாங்கினார். பொது செயலாளர் டி.எஸ்.மோகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பணிமனை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் நேற்று காலை 63 கிலோ கேக் வெட்டி
திமுக நிர்வாகிகள் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து மதியம் 1000 பேருக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் காஞ்சி  தெற்கு மாவட்ட
செயளாலர் க.சுந்தர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
ஒன்றிய செயளாலர் ஞானசேகரன், நகர செயளாலர் பாரிவள்ளல், தலைமை செயற்குழ
உறுப்பினர் இரா.நாகன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழமலை
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் சாலவாக்கத்தில் காலை
மற்றும் மதியம் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, உத்திரமேரூரை
அடுத்த வெங்கசேரி கிராமத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயளாலர் குமார், இளைஞரணி அமைப்பாளர் பெ.மணி,
மற்றும் கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.