Disqus Shortname

உத்திரமேரூரில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

உத்திரமேரூர் மார் 05
உத்திரமேரூர் பேரூராட்சி 18 வார்டுகளுக்குட்பட்டது. இதில் தற்போது 40
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20
ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை அடிப்படையில் செய்யாற்றில்
ஆழ்துளை கிணறு அமைத்து உத்திரமேரூர் மக்களுக்கு குடிநீர் ஒருநாள் விட்டு
ஒருநாள் என்ற அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் வீடுகள் உருவாகி உள்ளது. இதனால் கோடைகாலங்களில் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டது. மக்கள் தொகை பெருக்கத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகவே கோடை காலங்களில் கடுமையான குடிநீர்பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும் 3 ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனமையால் கோடைகாலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை தற்போதே துவங்கிவிட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கமல்ராஜை கேட்ட போது தற்போது நிலவுகின்ற தண்ணீர் பற்றாகுறையை சமாளிக்க காஞ்சி மாவட்ட
ஆட்சியரின் உத்தரவின் பேரில் உத்திரமேரூர் ஏரியான வைரமேகதடாக ஏரியில் பொது நிதியிலிருந்து 35 லட்சம் மதிப்பில் 2 போர்கள் அமைத்து தண்ணீர் கொண்டுவரும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்தப்பணி இன்னும் ஒரிரு வாரங்களில் முடிந்த உடன் உத்திரமேரூர் பொது மக்களுக்கு
வினியோகிக்கப்படும். மேலும் 2.24 கோடி மதிப்பில் ஏரியில் ஆழ்துளை கிணறு
அமைப்பதற்க்கு அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். அந்த பணி துவங்கி
முடிந்தால் உத்திரமேரூரிற்கு எப்போது முழுமையாக குடிநீர் வழங்கப்படும்
என்றார்.

No comments