Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் : உத்திரமேரூரில் பழமை வாய்ந்த கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால் புதுப்பிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல் உத்திரமேரூர் அடுத்த அம்மைப்பநல்லூர் கிராமத்தில் உள்ள ஐய்யனாரப்பன், ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில்களிலும், உத்திரமேரூர் ஒன்றியம் பாளேஸ்வரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில்களும் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5 கோயில்களிலும் கடந்த 2 நாட்களாக கணபதி பூஜை, நவகிரக ஹோமம், கோபூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. புனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் கோவர்தன், ஜீவரத்தினம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

No comments