Disqus Shortname

கைத்தண்டலம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம் அச்சத்துடன் செல்லும் குழந்தைகள்

உத்திரமேரூர், மார்ச் 22:
உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் 500க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2005ம் ஆண்டு, மகளிர் சுய உதவி குழுவினருக்கான கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர், 8 ஆண்டுகக்கு முன் இப்பகுதி குழந்தைகளுக்காக, இந்த கட்டிடம் தற்காலிக அங்கன்வாடி மையமாக செயல்பட தொடங்கியது.
தற்போது இப்பகுதியில் உள்ள சுமார் 18 குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் படிக்கின்றனர். இங்கு காலை யில் கீரை உருண்டை, மதியம் முட்டை அல்லது கடலை கொண்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், சத்துமாவு சமையல் பொருட்கள் உள்பட அனைத்தும் ஒரே அறையில் வைக்கப்படுகின்றன.
இந்த கட்டிடம் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள், தினமும் தங்களது குழந்தைகளை அச்சதுடன் அனுப்புகின்றனர். மேலும் மழை காலங்களில் கட்டிடத்தின் உள்பகுதி முழுவதும் மழைநீர் ஒழுகி, குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் குழந்தைகள் உட்காருவதற்கு இடம் இல்லாமல் கடும் அவதியடைகின்றனர்.
மேலும் கட்டிடத்தில் வைக்கப்படும் உணவு பொருட்களும் விணாகிறது. எனவே இப்பகுதியில் அனைத்து வசதிகள் கொண்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
 
thnks:dinakaran.com

No comments