Disqus Shortname

உத்திரமேரூரில் ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி

உத்திரமேரூர் மார்ச், 06

ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய
முன்மாதிரி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
உத்தரமேரூர் ஒன்றியத்தை சேர்ந்த 26 நடுநிலைப்பள்ளிகளில் பயிலும்
மாணவ-மாணவியர்கள் படைப்புகள் வைக்கப்பட்டது. இதில் சேலார் படகு, நீராவி
மூலம் இயங்கும் லிப்ட், மரங்களின் மகத்துவங்கள், காடு வளர்ப்பு, இயற்கை
உணவுகள், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவைகள் அடங்கிய 50-ற்க்கும் மேற்பட்ட
மாணவர்களின் படைப்புகள் இங்கு வைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின்
படைப்புகளை பற்றி மாணவர்களே விளக்கி கூறினார். இதில் சிறந்த படைப்பிற்கு
பரிசுகள் வழஙகப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்மாரிதிரி
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
உதவிதொடக்க கல்வி அலுவலர் பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர்
ஜீலியட் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்
சந்திரன் வரவேற்ப்புரை நிகழ்த்தி தொகுத்து வழங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் கணேஷ்வர் மற்றும்
வினோத்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி மாணவ—மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்.

No comments