Disqus Shortname

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஐ.டி.டி.டிரஸ்ட் மற்றும் எம்.எம்.சி ஹெல்திகேர் இணைந்து இலவச மருத்துவ முகாம்

உத்திரமேரூர் மார்ச்,21
உத்திரமேரூர் அடுத்த வாடாநல்லூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தியது. மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருததுவமனை ஐ.டி.டி டிரஸ்ட் எம்.எம்.சி ஹெல்திகேர் மற்றும் ஸ்ரீரங்கா மருத்துவமனையும் இணைந்து மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், கண், பல், அஸ்துமா நோய், மற்றும் பொது சிகிச்சை பிரிவு போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. வாடாநல்லூர் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து இருந்து 350க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்றனர். இம்முகாமில்  உத்திரமேரூர் சோழா அரிமா சங்க சாசனத்தலைவர் டாக்டர்.சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஸ்டெல்லா, ரோசிலின் வார்டு உறுப்பினர் மதுரைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எம்.சி ஹெல்திகேர் குழு பொது மேலாளர் முருகன் இம்முகாமிற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கினார். மருத்துவர்கள் சுப்பிரமணி, பரமசிவம், திவாகர்வாசுதேவன், வீரமுத்து மற்றும் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் வேலுச்சாமி, திபென்தி மற்றும் மருத்துவ குழுவினர் மற்றும் ஸ்ரீரங்கா மருத்துவமனை மருத்துவர்கள் பொது மக்களுக்கு சிகிச்சையளித்தனர். நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மாள் சமூதாய மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments